திண்டுக்கல் மாநகராட்சி எல் லையை விரிவாக்கம் செய்ய காலஅவகாசம் இருந்தும் மாநில அரசு ஆர்வம் காட்டாததால் விரிவாக்கத்துக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. திண்டுக்கல் நகர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பெயர் மட்டுமே மாற்றப்பட்டதே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு சுற்றியுள்ள 10 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து எல் லை விரிவாக்கம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக மாநகராட்சியுடன் இணைய உள்ள திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள பா லகிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, தோட்டனூத்து, அடியனூத்து, சீலப்பாடி, முள்ளிப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி ஆகிய 8 ஊராட்சிகள், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் பொன்மாந்துரைபுதுப்பட்டி ஊராட்சி, ஆத்தூர் ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம் ஊராட்சி என பத்து ஊராட்சிகளிலும் மாநகராட்சியுடன் இணைய சம்மதம் தெரிவித்து ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியிலும் ஊராட்சிகளை இணைக்க சம்மதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானங்கள் நகராட் சிகளின் நிர்வாக ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போதைய நகராட்சி எல்லைக்குள் எல்லை மறுவரை பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் தொடங்கினர். ஊராட்சிகளை வார்டுகளாகவும், மண்டலங்களாகவும் பிரிக்கும் பணி நடைபெற இருந்த நிலை யில் உள்ளாட்சித் தேர்தல் அறி விப்பு வெளியானது. எனவே குறைவான கால அவகாசம் உள்ள நிலையில் எல்லை விரி வாக்கம் இல்லாமலேயே தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், திண்டுக்கல் மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கப் பணி களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. கிராமப்புற மக்களும் மாநகராட்சியுடன் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில் விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
எனவே திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் இல்லாமல் பழைய நகராட்சியாகவே செயல் அளவில் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து வழக்கு நடைபெறுவதால் போதுமான காலஅவகாசம் மாநில அரசுக்கு உள்ளது. இதனால் பணிகளை உடனடியாக ஆரம்பித்தால் ஒரு மாதத்தில் எல்லை விரிவாக்கப் பணிகளை முடித்துவிடலாம்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திண்டுக்கல்லை மாநகராட்சியாக அறிவித்தபோதும் இதுவரை நகராட்சி எல்லைக்குள் தான் செயல்பாடு உள்ளது. கூடுதல் பணியாளர்கள் நியமனம் உட்பட எதிலும் அரசு கவனம் செலுத்தவில்லை.
மாநகராட்சியை விரிவாக்கம் செய்தால் புதிதாக சேர்க்கப்படும் ஊராட்சி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துவிட்டுத்தான் வரிகளை கூடுதலாக வசூலிக்க முடியும். அடிப்படை தேவைகளை செய்ய மாநகராட்சியிடம் நிதி ஆதாரங்கள் இல்லை. இதைக்கருத்தில் கொண்டு எல்லை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுப்பதில் அரசு தய க்கம் காட்டிவருகிறது.
மேலும் திண்டுக்கல் ஒன்றியத்தில் மொத்தம் 14 ஊராட்சிகள் உள்ளன. இதில் எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைந்துவிட்டால் 6 ஊரா ட்சிகளை கொண்டு மிகச்சிறிய ஒன்றியமாகிவிடும் திண்டுக்கல். இதனாலும் ஊராட்சிகளை இணைக்க அரசு தயக்கம் காட்டிவருகிறது.
அரசு உத்தரவிட்டால் வார்டுகள் பிரிக்கும் பணி, மண்டலங்கள் பிரிக்கும் பணியை ஒரு மாதத்தில் நகரமைப்பு அலுவலர்கள் முடித்துவிடுவர். ஆனால் எல்லை விரிவாக்கம் செய்ய மனம் இல்லாததால்தான் இந்த கால தாமதம்.
உள்ளாட்சி தேர்தல் எவ்வளவு தாமதமாக வந்தாலும், திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் சாத்தியமே இல்லை என்றே தெரிகிறது. தற்போதே மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடம், பஸ் நிலையத்தை நகருக்கு வெளியே கொண்டு செல்வது எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் எல்லை விரிவாக்கம் இல்லாதது திண்டுக்கல் நகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் உட்பட பல பாதிப்பை ஏற்படுத்தும் என் றார்.