தமிழகம்

அதிமுக அம்மா கட்சியில் தேர்தல் பொறுப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக அதிமுக (அம்மா) அணி சார்பில் ஜே.கே.ரிதீஷ் உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன.அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தினசரி மாலை வேளையில் தொகுதிக்குள் வாக்கு சேகரித்து வருகிறார். அக்கட்சியின் சார்பில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூடுதல் பொறுப்பாளர்கள் என 203 பேர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மேலும் 6 பேர் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கட்சியின் செய்தித்தொடர்புக் குழு உறுப்பினர் ஆர்.எம்.டி.ரவீந் திரஜெயன், மாணவர் அணி துணைச்செயலாளர் சோலை இரா.கண்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் கே.பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்பி., ஜே.கே.ரிதீஷ், மேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சாமி, புரசை வி.எஸ்.பாபு ஆகிய 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT