தமிழகம்

ரூ.75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன்

செய்திப்பிரிவு

பணமோசடி வழக்கில் கைதாகி யுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழ கத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் செய்த பணமோசடி தொடர்பாக, எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி பச்சமுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்தது. அப்போது பச்சமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி, நடந்த பணமோசடி சம்பவத்துக்கும் பச்சமுத்துவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லா புகார்களும் மதன் மீதுதான் உள்ளது; பச்சமுத்து மீது கிடையாது. ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அரசு தரப்பில் மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆஜராகி ஜாமீன் தருவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கின் தீ்ர்ப்பை தள்ளி வைத்தார். நேற்று இரவு 7 மணிக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பச்ச முத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, ரூ.75 கோடியை முன்தொகையாக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண் டும். தலா ரூ.10 லட்சத்துக்கு இருநபர் பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

SCROLL FOR NEXT