தமிழகத்தை மீண்டும் இருளில் தள்ள திராவிடக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களது முயற்சி பலிக்காது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய அரசு திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். பின்னர் களியலில் அவர் அளித்த பேட்டி:
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நடத்தப்பட்ட வைர விழா அவருக்கு பெருமை சேர்க்கும் விழா அல்ல. அரசியலில் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட விழாவாகும். கருணாநிதி துடிப் போடு இருந்திருந்தால் இந்த விழாவையே வேறு மாதிரி நடத்தியிருப்பார். கூடா நட்பு கேடாய் முடியும் என்று யாரை குறிப்பிட்டாரோ அவர்கள் முன்னி லையில் விழா நடத்தியிருக்கின் றனர்.
காங்கிரசால் திமுகவுக்கு, தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட கேடுகள் என்னென்ன என்பதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்துக்கு அழைப்பு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எந்த நாட்டு சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
மேடையில் கூடிய தலைவர் களை வைத்து, காங்கிரசுக்கு தமிழகத்தில் எவ்வளவு சதவீத வாக்கு, லாலு பிரசாத், நிதீஷ்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்வ ளவு சதவீத வாக்குகல் உள்ளது என்பதை கூட்டிப்பார்த்தால் தெரியும்.
தமிழகத்தை மீண்டும் 50 ஆண்டுகள் இருளில் தள்ள திராவிடக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. ஆனால் அவர்களது முயற்சி பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.