தமிழகம்

சுரங்கப்பாதையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

செய்திப்பிரிவு

சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மாதவி. ராயபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக மாதவி நடந்து சென்றார். அப் போது பின் பக்கமாக வந்த ஒரு நபர் மாதவி கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பிடித்து இழுத்தார். உடனே மாதவி செயினை பிடித்துக் கொண்டு கொள்ளையனுடன் போராடினார். கூச்சலிட்டார்.

அப்போது, செயின் அறுந்து பாதி செயின் கொள்ளையனின் கையிலும், மீதி மாதவியின் கையிலும் இருந்தது. கிடைத்த செயினுடன் கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT