திருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூர் அருகே அரசுப் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
மதுரை ராஜீவ்நகரை சேர்ந்த ராமன் மனைவி ஜோதி(57), ஜனார்த்தனன் மகன் விக்னேஷ் பாபு(27), இவரது மனைவியும் நிறை மாத கர்ப்பிணியுமான பிரியா(23), உறவினர்கள் பாபு(52), சபிதா பேபி(44), சுரேஷ் (17), கார்த்திக் ஆகிய 7 பேரும் வேனில் குற்றாலத் துக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை அருவிகளில் குளித்துவிட்டு மாலையில் மதுரைக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர்.
வேனை விக்னேஷ்பாபு ஓட்டினார். கடையநல்லூரிலிருந்து 7 கி.மீ. தூரத்திலுள்ள இடைகால் என்ற இடத்தில் சென்றபோது எதிரே சங்கரன்கோவிலில் இருந்து கடையநல்லூரை நோக்கி வந்த அரசு பேருந்தும், வேனும் நேருக்குநேர் மோதின. இதில் வேன் நொறுங்கியது. அதிலிருந்த ஜோதி, விக்னேஷ்பாபு, பிரியா, பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சபிதாபேபி, சுரேஷ் ஆகியோரும் பேருந்து ஓட்டுநர் இருதயராஜ்(45) உட்பட பயணிகள் 5 பேரும் காயமடைந்தனர். காய மடைந்தவர்கள் தென்காசி, பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டனர்.