கரூர் மாவட்டம் வெங்கமேடு கிரா மத்தில் பதுங்கி இருந்த, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த கலா(52), சந்திரா(42) ஆகிய 2 பெண் மாவோயிஸ்ட்களை கடந்த 21-ம் தேதி க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை, 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாவோயிஸ்ட் கள் கலா, சந்திரா ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். அவர்களிடம், க்யூ பிரிவு எஸ்பி மகேஸ்வரன், தலைமையில் ஏடிஎஸ்பி சந்திரசேகர், திருச்சி டிஎஸ்பி பால்வண்ணநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை முதல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சேலத்தில் இருந்து கரூருக்கு வந்து தங்கி இருந்ததற் கான காரணம் என்ன, யார் யாரு டன் தொடர்பில் இருந்தனர், மாவோயிஸ்ட்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேறு யாரும் தமிழகத் தில் உள்ளனரா என்பன உள் ளிட்ட விவரங்களை கேட்டதாகத் தெரிகிறது. பெண் மாவோயிஸ்ட் கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.