பொதட்டூர்பேட்டை மற்றும் பொன் னேரியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட் டத்தில் நடத்தப்பட்ட திடீர் சோத னையில் இவர்கள் சிக்கினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு வைரஸ் காய்ச்சல் பரவின. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு போலி டாக்டர்களும் ஒரு காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள், போலி மருத்துவர்களைக் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியது.
இதன் விளைவாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், நவம்பர் மாதம் வரை மட்டும் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப் பட்டனர்.
பொதட்டூர்பேட்டை
இந்நிலையில், மீண்டும் போலி டாக்டர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் தயாளன் தலைமையிலான குழுவினர், திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் திடீர் சோதனை மேற் கொண்டனர்.
இதில் கடையின் ஒரு பகுதியில், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹரி (27), கடந்த 3 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி, மருந்து களை கொடுத்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹரியை கைது செய்தனர்.
பொன்னேரி
அதேபோல், நேற்று முன்தினம் மாலை பொன்னேரி ஹரிஹரன் பஜார் பகுதியில் இயங்கி வந்த கிளினிக் ஒன்றில், மாதவரம் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமை மருத்துவர் கண்ணகி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஏஎன்எம் நர்சிங் படிப்பு மட்டுமே படித்த பொன்னேரி, திருவாயர்பாடியைச் சேர்ந்த ஷோபனா சந்திரன் (53), கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போலி டாக்டரைக் கைது செய்தனர்.