தமிழகம்

குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு ஓரிரு மாதங்களில் அடிக்கல் நாட்டு விழா: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

ஓரிரு மாதங்களில் குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாஜக இளைஞரணி மாநில செயற் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட மக்க ளின் கனவுத் திட்டமான குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்று வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில எம்பிக்கள் பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறி யுள்ளார். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித் துக்கொள்கிறேன்.

குளச்சல் அருகே விழிஞம் என்ற இடத்தில் துறைமுகம் இருப்பதால் இதற்கு கேரளம் எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. அருகருகே 2 துறைமுகங்கள் இருப்பதால் விழிஞம் துறைமுகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அடுத்தகட்டமாக நிலங் கள் கையகப்படுத்துதல், சாலை கள், ரயில் பாதை அமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்.

ஓரிரு மாதங்களில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

SCROLL FOR NEXT