தமிழகம்

சென்னை தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரிக்க முயற்சி: 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

செய்திப்பிரிவு

சென்னை தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரிக்க முயன்ற தாகக் கூறி 4 பேரை உடுமலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(50). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், முதல் மனைவியை பிரிந்து வேலூரில் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு, திருமணத் தர கர்கள் மூலம் திருப்பூரைச் சேர்ந்த சஜினா(36) என்பவரை 2-வது திருமணம் செய்தார். அப்போது தரகர்கள் மூலம் கோவையைச் சேர்ந்த சிலரின் நட்பு இஸ்மாயிலுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 2-வது மனைவியையும் பிரிந்தார்.

இதையடுத்து பிப்.15-ம் தேதி இஸ்மாயிலை 5 பேர் கடத்திச் சென்று உடுமலை காந்தி நகரில் உள்ள வீடு ஒன்றில் 15 நாட்கள் அடைத்து வைத்தனர். அப்போது இஸ்மாயிலிடம் உள்ள சொத்துகள் உள்ளிட்டவைகளை கேட்டு மிரட்டி யுள்ளனர். அவர்களின் மிரட்ட லுக்குப் பணியாததால், சேலத் துக்கு அழைத்துச் செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டது. நேற்று முன்தினம் இரவு, காரில் அவரை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இயற்கை உபாதைக்காக வாகனத்தை விட்டு இறங்கும்போது, இஸ்மாயில் தன்னை காப்பாற்றும்படி கதறியுள் ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மீட்டனர்.

இது தொடர்பாக, கோவை போத் தனூரைச் சேர்ந்த ரஹமத் துல்லா(32), உக்கடம் சுஜிர்(31), கரும்புக்காடு நவ்ஷாத்(37), நம் பாஷ் (28) ஆகியோரை பிடித்தனர். கோவையைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் அங்கிருந்து தப்பி ஓடினார். முகமது இஸ்மாயிலை மீட்டு, அவர் அளித்த புகாரின்பேரில் 4 பேரை உடுமலை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT