தமிழகம்

8% வளர்ச்சியை எட்டுவதே முதல் இலக்கு: பிரணாப்

செய்திப்பிரிவு

8 சதவீத பொருளாதார வளர்ச்சியை மீண்டும் அடைவதே முதல் இலக்காக கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

28-வது இந்திய பொறியாளர்கள் மாநாட்டினை சென்னையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்துப் பேசிய போது இதனை தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வளர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்றும் வருத்தம் தெரிவித்தார். சர்வதேச நிதி நெருக்கடியை சவாலாக எதிர்கொண்டு, பல வருடங்களாக தக்கவைத்திருந்த 8% வளர்ச்சியை அடைய முற்பட வேண்டும் என்றார். இந்தியா இந்த இலக்கினை அடையும் என தான் முழுமையாக நம்புவதாகவும் கூறினார்.

பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT