தமிழகம்

10 நகரங்களில் வெயில் சதம்

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள் ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெயில் தொடர்பாக எந்த எச்சரிக்கை யும் இல்லை.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி எடுக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அளவின்படி, திருத்தணியில் 106.7, வேலூரில் 105.26, கரூர் பரமத்தியில் 104.36, சென்னையில் 103.64, திருச்சியில் 102.74, மதுரையில் 102.56, புதுச்சேரியில் 101.66, நாகப்பட்டினத்தில் 101.12, கடலூர் மற்றும் காரைக்காலில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT