எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை மண்டல பொறுப்பாளர்களாக 27 பேரை தீபா நியமித்துள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய செய லாளர்களை நியமிப்பதற்காக அந்தந்த பகுதி நிர்வாகி களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மண்டல பொறுப் பாளர்களுக்கு தீபா அறிவுறுத்தி யுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி எம்ஜிஆர்-அம்மா-தீபா- பேரவை என்ற அமைப்பை தொடங்கி, அதற்கு கொடியையும் அறிமுகம் செய்தார். ஆனால், நிர்வாகிகள் பட்டியலை அன்றைய தினம் வெளியிடல்லை. மாறாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறி வித்தார். இதற்கிடையே, பேரவை யின் தற்காலிக செயலாளர், தலைவர் பதவிகளுக்கு ஏ.வி.ராஜா மற்றும் சரண்யா என்ற இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அப்போது, தொண்டர்கள் சிலர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களைச் சந்தித்த தீபா, “முழுமையான நிர்வாகிகள் பட்டியல் பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடுவேன்” என தெரி வித்தார். ஆனால், அன்றைய தினமும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இத னால், கடந்த 2 மாதங் களாக காத்திருந்த தீபாவின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந் தனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் சரியான நிர்வாகிகளைத் தேர்தெடுத்து விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் தீபாவிடம் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தேர்ந்தெடுக் கப்பட்ட மண்டல நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்துக் குப் பிறகு, மண்டல பொறுப் பாளர்கள் பட்டியலை தீபா வெளியிட்டார். அதில், 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக மொத்தம் 27 பேர் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
ராஜகண்ணப்பன்
கன்னியாகுமரி, திருநெல் வேலி மாவட்டங்களை உள்ளடக் கிய 1-வது மண்டலத்துக்கு முன்னாள் எம்எல்ஏ துரையப்பா, மதுரையைச் சேர்ந்த பசும்பொன் செ.பாண்டியன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 2-வது மண்டலத்துக்கு பொறுப் பாளர்களாக முன்னாள் எம்எல்ஏக்கள் சரஸ்வதி, மா.பா.ரோகிணி உள்ளிட்டோரும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங் களை உள்ளடக்கிய 3-வது மண் டலத்துக்கு முன்னாள் எம்.பி ராஜா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இதேபோல, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களை உள்ளடக்கிய 4-வது மண்டல பொறுப்பாளர்களாக ராஜகண்ணப்பன், பாண்டு ரங்கன் உள்ளிட்டோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மண்டல பொறுப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மா.பா.ரோகிணி கூறியதாவது:
முதல்கட்டமாக பேரவையின் மண்டல பொறுப்பாளர்களை தீபா நியமித்துள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக மாவட்ட, நகர, பேரூராட்சி, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள், தொண்டர்களிடமிருந்து விண் ணப்பங்களை பெற்று 10 நாட்களில் சமர்ப்பிக்குமாறு மண்டல பொறுப்பாளர்களுக்கு தீபா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத் தும் 15 நாட்களில் நிறை வடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.