தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு முறைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஜார்ஜ் தலைமையில் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.

"இரவு 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. நீச்சல் குளத்தில் மேடைகள் அமைக்கக் கூடாது. மதுபானம் வழங்கும்போது உரிய விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

மது அருந்தியவர்களை வீடுகளுக்கு அனுப்ப வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும்" என ஓட்டல் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. காவல் கூடுதல் ஆணையர்கள் ரவிக்குமார், சங்கர், சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT