தமிழகம்

வாழ்க்கை முறையை மாற்றிய இலவச கல்வி: பழங்குடியின மாணவர்கள் நெகிழ்ச்சி

இ.மணிகண்டன்

காடுகளில் சுற்றித் திரிந்த பழங்குடியின சிறுவர்களின் வாழ்க்கை முறை இலவசக் கல்வியால் முற்றி லும் மாறி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம் அய்யனார் கோயில், திருவில்லி புத்தூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு, அத்திகோவில், ஜெயந்த் நகர், வள்ளியம்மாள் நகர், வத்தி ராயிருப்பு அருகே உள்ள சதுர கிரி அடிவாரப் பகுதியான தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பல நாட்கள் தங்கி யிருந்து தேன், கிழங்கு வகைகள், மூலிகை செடி கொடிகள், நன்னாரி வேர், சாம்பிராணி ஆகியவற்றை சேகரித்து வந்து வியாபாரிகளிடம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்.

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. இந்நிலையில், அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதல்கட்டமாக அந்தக் குழந்தைகள் கல்வி பயில திட்ட மிடப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ராம்கோ குழுமம் சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக் கும் பளியர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் 100-க்கும் மேற்பட்டோர் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ராஜபாளையத்தில் ஒரு ஏக்கரில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவி யர் உண்டு உறைவிட விடுதி அனைத்து அடிப்படை வசதிக ளுடன் கட்டப்பட்டு 24.2.2011-ல் திறக்கப்பட்டது. இங்கு பளியர் இனத்தைச் சேர்ந்த 155 மாணவ, மாணவிகள் தங்கி பள்ளிகளில் இலவசக் கல்வி பயின்று வரு கின்றனர். இவர்களில் 105 மாணவர்களுக்கு உணவு மானிய மாக அரசு ஆண்டுக்கு தலா ரூ.755 வழங்கி வருகிறது.

அத்துடன் மாணவ, மாணவி களுக்கான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், மாற்று உடைகள், பள்ளிப் பைகள், மருத்துவச் செலவுகள், பண்டிகைக் காலத்தில் புத்தாடைகள், தேர்வு விடுமுறை காலங்களில் ஊருக்குச் சென்று வர ஆகும் செலவுகள் அனைத் தும் பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சேரிட்டி டிரஸ்ட் மூலம் வழங்கப் படுகின்றன.

இங்கு மாணவர்களுக்கு யோகா, சமஸ்கிருதம், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, நீதி போதனை வகுப்புகள், ஓவியப் பயிற்சி, இசை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்ற ம.பாண்டிச்செல்வி என்ற மாணவி பி.எஸ்ஸி நர்சிங் படித்து தற்போது செவிலியராகப் பணிபுரிகிறார். மகாலட்சுமி என்ற மாணவி பொறியியல் பட்டம் பெற்று தற்போது ஐஏஎஸ் பயிற்சி பெற்று வருகிறார். அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் காளியம்மாள் என்ற மாணவி 1,033 மதிப்பெண் பெற்றது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து பாண்டிச்செல்வி கூறும்போது, "இந்தப் பள்ளியில் சேர்ந்து பயின்ற பிறகுதான் தீபாவளி, பொங்கல் பண்டிகை களை கொண்டாடினோம். தினமும் மூன்று வேளை உணவு உண்கி றோம். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டோம். எங்களது வாழ்க்கை முறை அடியோடு மாறி விட்டது" என்றார்.

ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா கூறும்போது, "பழங்குடியின மாண வர்கள் சிறப்பான முறையில் கல்வி பயின்று வருகின்றனர். கல்வியால் அவர்கள் மற்றவர்களைப் போன்று வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொள்ள முடியும். அத்துடன் அரசு வேலைவாய்ப்புகளிலும் முன்னு ரிமை வழங்கப்படுகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அரசின் உயர் பதவிகளுக்குச் செல்ல முடியும்" என்றார்.

SCROLL FOR NEXT