தமிழகம்

கனமழைக்கு பிறகு நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு இல்லை மணல் திட்டுகள் அகற்றப்படவில்லை: விபத்து அதிகரிக்கும் அபாயம் என புகார்

செய்திப்பிரிவு

சமீபத்தில் பெய்த மழையினால், நெடுஞ்சாலைகளில் மணல் திட்டு கள் அகற்றப்படாமலும், பராமரிப்பு பணிகள் நடைபெறாமலும் இருப்ப தால், சாலை விபத்துகள் அதி கரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 184 சங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரு கின்றன. அந்த சுங்கச் சாவடி களின் கட்டுப்பாட்டில், 4,832 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை கள் அமைந்து உள்ளன. தமிழகத் தில் அதிகளவில், 28 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும், கட்டணங்கள் மாறுபடுகின்றன.

நெடுஞ்சாலைகள் போட்டு அடுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தப்படி கூறப்படுகிறது. ஆனால், இது வரையில் எந்த சுங்கச் சாவடியும் மூடப்படவில்லை என்பதுதான் உண்மை. தொடக்கத்தில் 40 கி.மீ. தூரத்துக்கு சுங்கச் சாவடிகளில் தொடக்க கட்டணமே ரூ.20ஆக இருந்தது. இதுவே தற்போது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே, சில சுங்கச்சாவடிகளில் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. இப்படி கட்டணம் மட்டுமே உயர்த்தப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடத்தப்படுகிறதா? என்றால், ஏமாற்றமே மிஞ்சுகிறது. குறிப்பாக திருச்சி சென்னை (என்.எச்.45) நெடுஞ்சாலை மோசமாக இருப்பதாக வாகன ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.சுகுமாறன் கூறுகை யில், ‘‘சமீபத்தில் பெய்த கன மழையினால், நெடுஞ்சாலைகள் பலத்த சேமடைந்துள்ளன. குறிப் பாக, வாலாஜா சென்னை, திண்டிவனம் சென்னை, மாதாவரம் தடா ஆகிய நெடுஞ் சாலைகள் கனமழையால் சேத மடைந்துள்ளன. மணல் திட்டுகள் ஆங்காங்கே உள்ளன, பள்ளமும் மேடுகளாகவும் இருக்கின்றன. வானகரம், வேலப்பன்சாவடி, திருவேற்காடு, பூந்தமல்லி நெடுஞ் சாலையின் ஒரு பகுதி ஆகியவை படுமோசமாகவே உள்ளன. இது தவிர, சாலை விபத்துகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடி களிலும் பராமரிப்பு செலவுக்காக தினமும் தலா ரூ.2.5 லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், எங்கு பராமரிப்பு பணிகள் நடக்கிறது என்றே தெரியவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT