சுட்டெரிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்க குளிர்ந்த நீரைப் பருக, குழாய் பொருத்திய மண் பானைகள் விருதுநகரில் விற்பனை செய்யப்படுகின்றன. கோடையின் தொடக்கத் திலேயே, வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட அதிகமாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், குளிர்ந்த நீரைக் குடித்து பலர் தாகத்தை தணித்துக் கொள்வர்.
கோடை வெயில் தொடங்கி யவுடனே பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் மண்பானை பயன்படுத்துவது வழக்கம். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது மண்பானைகளும் மாற்றம் பெற்றுள்ளன. அதாவது, குழாயுடன் கூடிய மண்பானைகள் தற்போது விருதுநகருக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இவை குறைந்தபட்சம் ரூ. 120 முதல் அதிக பட்சம் ரூ. 480 வரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மண்பானை மட்டுமின்றி, மண் பாண்ட டம்ளர், ஜக், ஜாடி போன்றவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவை குறைந்தபட்சம் ரூ. 20 முதல் அதிக பட்சம் ரூ. 200 வரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையான முறையில் குளிர்ந்த நீர் கிடை ப்பதால், பொதுமக்கள் மண் பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.