அம்மா சிமென்ட் வாங்க ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கணக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் சில பயனாளிகள் பழைய முகவரிக்கே டி.டி. எடுப்பதால் மீண்டும் வங்கிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா சிமென்ட் என்ற பெயரில் மலிவு விலை சிமென்ட் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 1,500 அடி சதுரஅடி வரை வீடு கட்டுபவர்கள், பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு பயனாளிகள் 100 சதுரஅடிக்கு 50 மூட்டைகள் வீதம் சிமென்ட் வாங்கலாம். கடைகளில் ஒரு மூட்டை சிமென்ட ரூ.400, ரூ.410-க்கு விற்பனை செய்யப்படு கிறது. அம்மா சிமென்ட் ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத னால் அம்மா சிமென்ட் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின் றனர்.
அம்மா சிமென்ட் வாங்க விரும்புவோர் வீடு கட்டும் திட்டத் தின் வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்பார்வையாளர் அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளரிடம் கையெழுத்து பெற்று தங்கள் ஒன்றிய அலுவலகங்களில் விண் ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் பதிவு மூப்பு அடிப்படை யில் சிமென்ட் விற்பனை செய்யப் படும். ஒரே நேரத்தில் 50 மூட்டைகள் வரை சிமென்ட் வாங்கலாம். வீடு கட்டும் பயனாளிகள் சிமென்ட் வாங்குவதற்காக கடந்த மாதம் வரை டான்செம் சென்னை என்ற பெயருக்கு டி.டி. எடுத்து வந்தனர். மாநிலம் முழுவதும் ஒரே பெயரில் டி.டி. எடுக்கப்பட்டதால் அதை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே இந்த மாதம் முதல் டி.டி. முகவரி மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக மதுரை மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் அம்மா சிமென்ட் சப்ளை ஸ்கீம், மதுரை என்பதுடன் சர்வீஸ் பிராஞ்ச் சென்னை என்ற பெயருக்கு டி.டி. எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே சிமென்ட் வாங்கி யவர்கள் மீண்டும் வாங்கும்போது பழைய பெயருக்கே டி.டி. எடுக் கின்றனர். அதை சிமென்ட் விற் பனை நிலையத்தில் கொடுக்கும் போது புதிய முகவரிக்கு டி.டி. எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அதை மாற்றுவதற்காக பயனாளிகள் மீண்டும் வங்கிக்குச் சென்று ரத்து செய்து புதிய டி.டி. எடுக்கும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் செலவாகிறது.
இதுகுறித்து சிமென்ட் விற் பனை அதிகாரிகள் கூறியதாவது: சிமென்ட் வாங்குவதற்காக அலு வலகத்துக்கு வருபவர்களிடம் டி.டி. எடுக்க வேண்டிய புதிய முகவரியை கூறிவிடுகிறோம். சிலர் முகவரி மாற்றப்பட்டது தெரி யாததால் பழைய முகவரிக்கே டி.டி. எடுத்து வருகின்றனர். அவர்களிடம் புதிய முகவரிக்கு டி.டி. மாற்றி வருமாறு கூறுகி றோம். எந்த முகவரிக்கு டி.டி. எடுக்க வேண்டும் என்பதை அலு வலகத்தின் முன்னால் எழுதி வைத்து விடுகிறோம் என்றனர்.