தமிழகம்

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

செய்திப்பிரிவு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதா னுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக் கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட் டங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இயற்கை வளங்கள் சுரண்டப்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.

பல தலைமுறையினருக்கு உதவும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது என்றாலும் எதிர்கால தலைமுறையினரும் அனுபவிக்கும் வகையில் இயற்கை வளங்கள் காப்பாற்றப் பட வேண்டும்.

மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட் டால் இது இயற்கை நீதிக்கு எதிராக அமைந்து விடும் என அஞ்சுகிறேன். மக்கள் தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள். அந்த எஜமானர்களின் விருப்பத் துக்கு ஏற்றவாறு அரசின் முடிவு இருக்க வேண்டும். எனவே, தமிழக விவசாயிகள், பொதுமக்களின் நலன்கருதி நெடுவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரி வாயு அமைச்சகம் அனுமதி அளிக்காமல் கைவிட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT