தமிழகம்

நாவலூர் அருகே ரூ.10 லட்சம் கேட்டு ஐடி பொறியாளரை கடத்திய 4 பேர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

நாவலூர் அருகே ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐடி பொறி யாளர் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்டதாக 2 பொறியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் பிரேம்குமார்(28). பாப்பு என்பவரின் மகன் சந்திப்சாரி(29). இருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும், கடந்த 27-ம் தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்றனர். பின்னர், பணி முடித்து சந்திப்சாரி மட்டும் வீட்டுக்குத் திரும்பினார். அவரிடம், கூடுதல் பணி இருப்பதால், இரவு 1 மணிக்கு வருவதாக பிரேம்குமார் செல்போனில் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிகாலை ஆகியும் வராததால் சந்தேமடைந்து அவரது செல்போனை தொடர்பு கொண் டபோது அது அணைக்கப்பட்டிருந் தது. இதையடுத்து, தாழம்பூர் போலீஸில் 28-ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில் போலீ ஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, பிரேம்குமாரை மர்மநபர்கள் கடத்தியிருப்பதாக வும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டு வதாகவும் சந்திப்சாரி மாலை 6 மணிக்கு போலீஸாரிடம் தெரிவித் தார். இதைத் தொடர்ந்து, காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி.முத்தரசி தலை மையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கடத்தல்காரர்கள் மீண்டும் சந்திப்சாரியை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் பணத்துடன் கேளம் பாக்கம் பேருந்து நிலையத்துக்கு தனியாக வருமாறு தெரிவித் துள்ளனர். இதையடுத்து, தனிப் படை போலீஸார், சந்திப்சாரியை பேருந்து நிலையத்துக்கு அனுப்பிவிட்டு அப்பகுதியை கண்காணித்தனர்.

ஆனால், கடத்தல்காரர்கள் பணம் பெறும் இடத்தை மாற்றி மாற்றிக் கூறி பல்வேறு இடங் களுக்கு வரவழைத்து அலைக் கழித்தனர். பின்னர், இரவு 11.30 மணிக்கு செம்மஞ்சேரி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வருமாறு தெரிவித்தனர். அங்கு சென்றபோது, கடத்தல் கும்பலைச் சேர்ந்த பார்த்திபன், என்பவர் பணம் பெறுவதற்காக வந்தார். அப்போது, மறைவில் இருந்த போலீஸார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பின்னர், அவர் அளித்த தகவ லின்பேரில், பழைய மகாபலிபுரம் சாலையில் காரில் பார்த்திபன் வரு கைக்காக காத்திருந்த தையூரைச் சேர்ந்த பிரவின் பாலாஜி(25), ஜெயசீலன்(19), மற்றும் அரக் கோணத்தை சேர்ந்த விவேக் ராஜ்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து பிரேம்குமாரை மீட்டனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் தமிழ்செல்வன் கூறிய தாவது: கைது செய்யபட்ட விவேக் ராஜ் மற்றும் பிரவின் பாலாஜி ஆகிய இருவரும் பொறியியல் பட்ட படிப்பு முடித்துள்ளனர். இரவில் தனியாக வரும் பணத் துக்காக நபர்களை கடத்த திட்ட மிட்டு. இதன் பேரிலேயே, பிரேம்குமாரையும் கடத்தியுள்ள னர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT