இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, ரூ.2.74 கோடி மதிப் புள்ள தங்கத்தை காரைக்கால் நிரவி அருகே நேற்று பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய் வுப் பிரிவினர், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
காரைக்கால் அருகே நிரவி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிகாலை ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அரசுப் பேருந்தில், நாகூரைச் சேர்ந்த யாகூப் மரைக்காயர், முஸ்தாக் அமீர் பின் மஹிசாப் ஆகியோர், 8.76 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2.74 கோடி. இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடத்தலுக்கு துணை புரிந்ததாக நாகூர் சுலைமான் என்பவரும் கைது செய்யப்பட் டார். நாகை ஜுடீசியல் மாஜிஸ் திரேட் நீதிமன்றம் எண்.1-ல் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும், பின் னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.