அரசுப் பேருந்துகளில் முத லுதவி பெட்டிகள் இல்லாததால் விபத்துகளின்போது ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவ ரத்துக் கழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,790 உபரி பேருந்துகள் உட்பட சுமார் 22,474 பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நெடுந் தொலைவு பயணம் செய்யும் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத் தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள் ளது. ஆனால், பெரும்பாலான பேருந்துகளில் இந்த அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, நெடுந்தொலைவு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதலுதவி பெட்டி இருப்பதில்லை.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷ் கூறியதாவது:
பேருந்து பயணத்தின்போது மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் முதலுதவி பெட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவு பேருந்துகளில் குழந்தை களும், முதியோர்களும் பயணிக் கும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி மிகவும் அவசியமானது. ஆனால், பயணி களை ஏற்றிச் செல்லும் வாகனங் களில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என்ற விதிமுறையை யாரும் பின்பற்றுவது இல்லை. நெடுந்தொலைவு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒரு சில பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் எதிலும் முதலு தவி பெட்டி இல்லை. முதலுதவி பெட்டிகள் இருந்தாலும் அவற்றில் முதலுதவிக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள் எதுவும் இருப்பது இல்லை.
இதனால், சிறு விபத்துகளில் சிக்கி லேசான காயம் அடைந்தா லும், முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரும்வரை காத் திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே, அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துக ளிலும் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். குறிப்பாக வெளி நகரங்கள், மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கட்டாயம் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். மேலும், முதலு தவி அளிப்பது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, “தமிழ் நாடு மோட்டார் வாகன விதி 172 (5)-ன்படி போக்குவரத்து வாக னத்துக்கு தகுதிச் சான்று அளிக்கும்போது அதில் முதலுதவி பெட்டி இருப்பது கட்டாயமாகும். ஆனால், தகுதிச்சான்று பெறுவதற் காக மட்டும் கண்துடைப்புக்காக முதலுதவி பெட்டியை தற்காலி கமாக வைத்துவிட்டு பின்னர் எடுத்துவிடுகின்றனர். இதுதொ டர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விபத்துகளை கருத்தில்கொண்டு உடனடியாக பேருந்துகளில் முதலுதவி பெட்டி களை வைக்க தமிழக போக்குவ ரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.