மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தல சயன பெருமாள் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் குளம் பாலீத்தின் குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்களால் நிரம்பி அசுத்தமாகக் காட்சி யளித்தது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தை தூய்மைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் நீர்வற்றி யுள்ளதால் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து கடந்த வாரம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளி யானது.
இதன் எதிரொலியாக கோயில் குளம் தற்போது தூய்மையாகி யுள்ளது. அக் கோயில் குளத்தில் இருந்த பாலீத்தின் குப்பைகள் மற்றும் இதர குப்பைகள் அகற்றப் பட்டன. இக்கோயில் குளத்தை தூர்வாரும் பணியை யும் விரை வில் தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும் பக்தர்களும் வலியுறுத்துகின்றனர்.