தமிழகம்

உலகில் அன்பு, ஒற்றுமை வளர்ப்போம்: ஆளுநர், முதல்வர் ரம்ஜான் வாழ்த்து

செய்திப்பிரிவு

ரம்ஜான் பெருநாளில் உலகில் அன்பு, ஒற்றுமை, நல்லிணக் கத்தை வளர்ப்போம் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘ரம்ஜான் பெருநாளில், முஸ்லிம் சகோதரர் களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் தொண்டு ஆகியவற்றைக் கொண்ட உண்மையான வாழ்வை குரான் போதிக்கிறது.

எனவே நாம், தீர்க்கதரிசியான முகமது நபியின் கருத்து களைப் பின்பற்றி அன்பை வளர்ப்பதுடன், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலோங்கச் செய்வோம்’’ என கூறியுள்ளார்.

முதல்வர் கே.பழனிசாமி வெளி யிட்டுள்ள ரம்ஜான் செய்தியில், ‘‘ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சி யுடன் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, நல்லொழுக்கம், நற்பண்பு, ஈகை குணங்களை வளர்த்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, ஏழைகளுக்கு உணவளித்து, இறைவனைத் தொழுது ரம்ஜானை குடும்பத் துடன் கொண்டாடுவார்கள்.இந்த பெருநாளில், அமைதி அன்பு, மகிழ்ச்சி பெருகட்டும். சகோதரத்துவம் ஓங்க வாழ்த்து கிறேன்” என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT