தமிழகம்

குரூப்-1 முதல்நிலை தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்: சென்னையில் 43 ஆயிரம் பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவா ளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 85 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத்தேர்வு நேற்று நடத் தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வுக்காக தமிழகம் முழுவ தும் 32 மையங்களில் 749 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வெழுதினர். இவர்களில் சுமார் 1 ஒரு லட்சம் பேர் பெண்கள்.

சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, மயிலாப்பூர் புனித எபாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் வெங்கடசுப்பா ராவ் பள்ளி, டவ்டன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 146 தேர்வுக்கூடங்களில் 43 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். டவுட்டன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வுக் கூடத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோரும், லேடி ஆண்டாள் வெங்கடசுப்பா ராவ் பள்ளி, டவ்டன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரியும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) அடுத்த சில தினங்களில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT