கரூர் மாவட்டம் குப்பம் அருகே காங்கேயம்பாளையம் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று அங்கு புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் அதிகமானோர் கடை முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைக்குள் புகுந்து அங்கு இருந்து மது பெட்டிகளை வெளியே கொண்டுவந்து வீசி உடைத்தனர்.
தகவலறிந்து வந்த அரவக் குறிச்சி வட்டாட்சியர் சந்திரசேக ரன், க.பரமத்தி இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை மூடா விட்டால் அங்கிருந்து செல்ல மாட்டோம் என மக்கள் உறுதியாக தெரிவித்ததை அடுத்து, புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது. பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.23,000 இருக்கலாம் என கூறப்படுகிறது.