தமிழகம்

புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்: பெண்களுக்கு மருத்துவர் அறிவுரை

கே.சுரேஷ்

இன்று உலக புற்றுநோய் தினம்

தொற்றா நோய்களில் மக்க ளிடையே அதிக அளவு இறப்பு விகிதத்தை ஏற்படுத்தக்கூடியது புற்றுநோய். இந்நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகில் 5 லட்சம் பெண்கள் கருப்பைவாய்ப் புற்றுநோயாலும், 5 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும் இதுவரை பாதிக் கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவ சமாக பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி கூறியதாவது:

30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், கருப்பைவாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கருப்பை வாயில் ஹெச்.பி.வி. எனும் வைரஸ் கிருமித் தொற்று ஏற்படுவது, கருப்பைவாய்ப் புண்ணாகி நீண்ட நாள் கவனிக்கப்படாமல் இருப்பது, இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது, அதிக குழந்தைகள் பெறுவது ஆகியவை கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக உள்ளன. இதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்கா விட்டால் ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதேபோல, 10 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், 50 வயதுக்கும் மேல் மாதவிலக்கு தொடர்வது, நீண்டகாலமாக கர்ப்பத்தடை மாத்திரைகளைச் சாப்பிடுவது, குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்காமல் இருப்பது போன்றவை மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங் களாக உள்ளன.

அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் ‘கால்போஸ்கோப்பி’ பரிசோதனை மூலம் கருப்பை வாய் புற்றுநோயும், ‘மாமோகிராம்’ பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயும் கண்டறியப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011-ல் தொடங்கி கடந்த ஆண்டு வரை 4.39 லட்சம் பேருக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை யும், 4.40 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டது.

அதில், 5 சதவீதம் பேருக்கு கருப்பைவாய்ப் புற்றுநோயும், 3 சதவீதம் பேருக்கு மார்பகப் புற்றுநோயும் இருப்பது கண் டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப் படுகிறது.

அவ்வப்போது நடத்தப்படும் முகாம்களைப் பயன்படுத்தியும், அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள, பெண்கள் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

இது தொடர்பாக, சமூக சேவை நிறுவனங்களை ஒருங் கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுவினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மூலம் பேரணி, மனிதச் சங்கிலி, ரங்கோலி, போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

இத்தகைய பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தை தமிழக சுகாதாரத் துறை பாராட்டி யதுடன், இப்பணியில் ஈடுபட்ட 80 சிறப்பு செவிலியர்களும் பாராட்டப்பட்டனர் என்றார்.

SCROLL FOR NEXT