தமிழகம்

ஷேல் எரிவாயு விவகாரம்: நிபுணர் குழு அமைப்பது குறித்து தமிழக அரசின் கருத்து என்ன? - பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

செய்திப்பிரிவு

ஷேல் எரிவாயு தொடர்பாக காவிரி பாசனக் குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சென் னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் “காவிரி டெல்டா பகுதி யில் பாறைப் படிம எரிவாயு (ஷேல் காஸ்) எடுக்க மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனத் துக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பி.எஸ்.ராவ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பெட்ரோலியத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு கிரேட் எனர்ஜி கார்ப்பரேஷனுக்கு கொடுத்த உரிமத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டதை எதிர்த்து அந்த நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளதால், பிரச்சினை நிலுவையில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஷேல் காஸ் எடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் நாங்கள் அந்தத் திட்டத்தை கைவிடவில்லை என்று கூறியது நாளிதழ்களில் வெளிவந்தது. எனவே, ஆபத்து இன்னும் நீங்கவில்லை. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் ‘தற் போது, ஷேல் காஸ் எடுக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, இதுகுறித்து துறை சார்ந்த நிபுணர் குழுவை அமைப் பது பற்றி யோசித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. எனவே, துறை சார்ந்த நிபுணர் குழுவை மாநில அரசு அமைக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பாய உறுப்பினர்கள், “ஷேல் காஸ் நிபுணர் குழு அமைப்பது குறித்து தமிழக அரசின் கருத்து என்ன என்பதை அடுத்த விசாரணை யின்போது தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT