தமிழகம்

கருணாநிதி எச்சரிக்கை: மு.க.அழகிரி பதில்

ஹெச்.ஷேக் மைதீன்

தேமுதிக கூட்டணி தொடர்பாக மு.க.அழகிரி அளித்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்துள்ள கருணாநிதி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளர்.

திமுக தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கை தொடர்பாக மு.க.அழகிரியிடம் கேட்டோம் அப்போது அவர் கூறியதாவது:

உங்களது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளாரே? இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

அந்த அறிக்கை எனக்காக விடப்பட்டது அல்ல. பொதுவாக தலைவர் அறிவித்திருக்கிறார்.

உங்களது பெயரும் தானே அவரது அறிக்கையில் உள்ளது?

பத்திரிகைகளையும்தான் குறிப் பிட்டுள்ளார். கட்சியிலுள்ள அனை வருக்கும் பொதுவாக தலைவர் கூறியுள்ளார். அவ்வளவுதான். அது எனக்காகத்தான் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

தற்போதைய பிரச்சினை குறித்து, தலைவரை சந்தித்துப் பேசுவீர்களா?

அப்பாவும், பிள்ளையும் எப்படி சந்திக்காமல் இருப்பார்கள். அப்பாவும், மகனும் சந்திக்காமல் இருப்பார்களா?

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். திமுக தலைமை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘நடவடிக்கை அனைவருக்கும் பொருந்தும் என்று தலைவர் கூறியிருப்பது, அழகிரிக்கு மட்டுமல்ல. கட்சியில் திரைமறைவாக யாரெல்லாம் கோஷ்டி அமைத்து செயல்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருக்கும் சேர்த்துத்தான் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்’ என்றனர்.

SCROLL FOR NEXT