தமிழகம்

ஜெ. சொத்துகளை ஏலம் விட்டு கர்நாடக அரசுக்கு ரூ.12 கோடி வழங்க கோரி வழக்கு

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தியதற்காக கர்நாடக அரசு கோரும் ரூ. 12 கோடியை, ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விட்டு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டச் செயலாளர் சி.குமரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்த தால் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனையில் இருந்து மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீதான குற்றத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தற்போது இந்த வழக்கை நடத்திய வகையில் தங்களுக்கு வழக்கு கட்டணமாக ரூ. 12 கோடி தர வேண்டும் என கர்நாடக அரசு கோரியுள்ளது. இதை தமிழக அரசு நிதியி்ல் இருந்து வழங்கக்கூடாது. தேவைப்பட்டால் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்கலாம். அல்லது பெங்க ளூரு கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏலத்தில் விற்று வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சத்யநாராயணன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டு விசா ரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT