கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து தமிழ் பேசும் லட்சக்கணக்கான மக்களைப் பாதுகாக்க வேண்டி இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உங்களின் கடிதம் கிடைத்தது. தமிழகத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் உள் ளிட்ட சில பிரிவினரால் நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாகவும், சட்டரீதியாகவும் நடைபெற்று வருகின்றன. கர்நாடகத்தில் வன் முறைச் சம்பவங்கள் நடை பெற்றாலும் தமிழக மக்கள் அமைதி காத்து வருகின்றனர். கன்னடம் பேசும் மக்களுக்கு எதிராக எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ராமநாதபுரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர் புடையவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழ கத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வேதனை அளிக்கிறது
கர்நாடகத்தில் தமிழர்களையும், அவர்களின் சொத்துக்களையும் குறிவைத்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. அங்கிருந்து வரும் தகவல்களின்படி, தமிழக பதிவெண் கொண்ட 40 பேருந்து கள், 45 லாரிகள் உள்ளிட்ட ஏராள மான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், சேதப்படுத்தப் பட்டும் உள்ளன.
கர்நாடகத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல் தொடர்ச்சியாக தமிழக - கர்நாடக எல்லையான ஓசூரில் ஒன்றுகூடி, தமிழகத்தில் இருந்து வாகனங்களில் செல்லும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள், சொத் துக்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப் பட்டுள்ளன. கர்நாடகத்தில் தற் போது நிலவும் அபாயகரமான சூழ்நிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ் பேசும் மக்களை யும், அவர்களது உடைமை களையும் பாதுகாக்க தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத் தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.