செவ்வாய் கிரகத்துக்கு மனி தனை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நாசா விஞ்ஞானி லேரி ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அங்கமாக ஜெட் பிரபல்ஷன் லெபாரடரி (Jet Propulsion Laboratory) செயல்பட்டு வருகிறது. இதன் துணை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் லேரி ஜேம்ஸ் செயல் பட்டு வருகிறார்.
நேற்று சென்னை வந் திருந்த அவர், கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நாசா அமைப்பு இதுவரை பிற கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பிய செயற்கைக்கோள்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித் தும் மாணவர்களுக்கு விளக்கி னார். மாணவர்களின் சந்தேகங் களுக்கு பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இஸ்ரோ அமைப்பும், நாசா அமைப்பும் இணைந்து நிசார் (NISAR) என்ற செயற்கைக்கோளை கூட்டாக உருவாக்கி வருகின்றன. விவசாய செயல்பாடு, கண்ட தட்டுகள் ஆகியவை குறித்தும், பூமியின் நகர்வுகள் குறித்தும் இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். முழுக்க முழுக்க அறிவி யல் பயன்பாட்டுக்காக மட்டுமே இது பயன்படுத்தப்படும். ராணுவ ரீதியாக பயன்படுத்தப்படாது.
இதுவரை 26 கோள்கள் விண்வெளியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றில் உயிர்கள் வாழ்கின்றனவா என் பதை உறுதிப்படுத்த முடிய வில்லை.
பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடைய 5 முதல் 6 மாதங்கள் ஆகும். அந்த கிரகத்துக்கு மனிதனை அனுப்பினால், அங்குள்ள கதிர்வீச்சு மற்றும் பிற சூழல்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் விண்வெளியில் பல நாள்கள் இருக்கும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கணக்கில் கொள்ள வேண்டும். தற்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அதன்பின்னர் செவ்வாய் கிரகத் தில் தரையிறங்காமல், அதனை சுற்றி ஆய்வு செய்ய மனிதர்களை அனுப்புவோம். இதற்கான முயற்சி கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு லேரி ஜேம்ஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் அறிவியல் மற்றும் பொருளாதார அலுவலர் ஜோசப் பெர்னாட், கலாச்சார அலுவலர் எரிக் லேன், பெரியார் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.