தமிழகம்

ஆலந்தூர் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் ஞாநி

செய்திப்பிரிவு

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராக பத்திரிகையாளர் ஞாநி போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலப் பிரிவு இன்று அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பை, சென்னை - பெருங்குடியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலப் பிரச்சாரக் குழு தலைவர் டேவிட் பருண்குமார் வெளியிட்டார். அப்போது, பத்திரிகையாளர் ஞாநி உடன் இருந்தார்.

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான ஞாநி, சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தன்னை இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த முறை ஆலந்தூரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT