தமிழகம்

தலைமை செயலருடன் முதல்வர் ஆலோசனை

செய்திப்பிரிவு

மழை நிவாரணம், மீனவர் விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் செயலாளர்களுடன் முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்குப் பருவ மழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பி வருகிறது. பல மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் சேத மடைந்துள்ளன. மழைக் கால நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, மாவட்டக் கலெக்டர் களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நேற்று தலைமைச் செயலர், அரசு ஆலோ சகர் மற்றும் முக்கியத் துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் அரசு செயல்பட வேண்டிய விதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.

பருவ மழைக் கால சேதங்களை மதிப்பிடுதல், அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்துதல், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுதல், நீர் நிலைகள் உடையாமல் தேவை யான முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ளுதல், கனிம வள முறை கேடு புகார்கள் தொடர்பாக, சகாயம் குழுவை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை மேற்கொள்ள அனுப்புதல், ஐந்து மீனவர்கள் இலங்கையில் தூக்குத் தண்டனை பெற்றது தொடர்பாக, அவர்களைக் காக்கத் தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT