தமிழகத்தில் 81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
கடந்த 31.3.2017 நிலவரப் படி, தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் (மாநில வேலைவாய்ப்பு அலுவ லகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்) பதிவுசெய்துள்ளோர் பற்றிய விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளி யிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் சேர்த்து 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் அரசு வேலையை எதிர்பார்த்து பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 845 பேர் பிஎட் பட்டதாரிகள். 2 லட்சத்து 21 ஆயிரத்து 651 பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பேர் பொறியியல் பட்டதாரிகள்.
மேலும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 405 பிஏ பட்டதாரிகளும், 6 லட்சத்து 4 ஆயிரத்து 149 பிஎஸ்சி பட்டதாரிகளும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 341 பிகாம் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்திருக் கிறார்கள். இவர்கள் தவிர, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 18 எம்ஏ பட்டதாரிகளும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 937 எம்எஸ்சி பட்டதாரிகளும், 40 ஆயிரத்து 240 எம்காம் பட்டதாரிகளும் மாநில வேலைவாய்ப்பு அலுவகங்களில் பதிவுசெய்துவிட்டு அரசு பணியை எதிர்நோக்கியுள்ளனர்.