தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இது புயலாக மாறும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், இது வலுவிழந்துவிட்டதால், தமிழ கத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.