ஓட்டப்பிடாரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர் தலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி, திமுக கூட்டணி சார்பில் ஓட்டப் பிடாரம் தொகுதியில் போட்டி யிட்டார். இதில், 493 வாக்கு கள் வித்தியாசத்தில் அதிமுக வேட் பாளர் ஆர்.சுந்தர்ராஜிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகம் வந்த கிருஷ்ணசாமி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஓட்டப்பிடாரம் தொகுதி யில் நான் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யுற்றதாக அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், நான் வெற்றி பெற்றிருந்தேன். அங்கு நடந்தது தேர்தல் அல்ல; ஜனநாயகப் படுகொலை. எனவே, தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து வாக்கு களையும் மீண்டும் எண்ண வேண்டும். தபால் வாக்கு களை செல்லாததாக அறி வித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலில் வாக்காளர் களுக்கு அளிக்கப்பட்ட பணத்தை வெற்றி பெற்ற வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க வேண்டும். சில பகுதிகளில் வாக்குப்பதிவை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித் துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.