தமிழகம்

சுவாதி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ராம்குமாரின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில் கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே, மீனாட்சிபுரத்துக்கு, வழக்கறிஞர் ராம்ராஜ், தமிழக முற்போக்கு வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் நேற்று வந்தனர். ராம்குமாரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. ராம்குமார் மட்டுமே குற்றவாளி என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக் கிறார்கள். உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வில்லை. இந்த வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் நியாயமாக விசாரணை நடைபெறாது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வர், காவல்துறை தலைவர், மத்திய உள்துறை, மனித உரிமை ஆணையம், இதுகுறித்து நாங்கள் மனு அனுப்பியுள்ளோம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT