இலங்கையில் தமிழர்கள் படு கொலை தொடர்பாக சுதந்தி ரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் பாம்பனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கையை எதிரி நாடு என இந்தியா அறிவித்து பொருளாதாரம் உள்ளிட்ட அனை த்து தொடர்புகளையும் துண் டிக்க வேண்டும். கடந்த வாரம் இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினை குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது. பாஜக தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றார்.