தமிழகம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போதையில் வருவோரை அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் புதிய நிபந்தனை

செய்திப்பிரிவு

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போதை யில் வருவோரை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் புதிய நிபந்தனை விதித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப் பகுதி களில் கோயில் திருவிழாக்களின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தும் வழக்கம் உள்ளது. இதில் ஆபாச நடனங்கள் இடம்பெறுவ தாக கூறப்பட்டதால் தற்போது ஆடல், பாடலுக்கு போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இருப்பினும், நீதிமன்றத் தலையீட்டின்பேரில், ஆபாச நடனங்கள் இடம்பெறக்கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தற்போது அனுமதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூர், நிலக்கோட்டை தாலுகா மற்றும் கரூர் மாவட்டம் கிருஷ்ண நாராயணபுரம் தாலுகாவில் கோயில் விழாவின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தர விடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு:

ஆடல், பாடல் நிகழ்ச்சியை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும். எந்தவிதமான ஆபாச நடனமோ, ஆபாச வசனங்களோ இடம் பெறக் கூடாது.

மது மற்றும் போதை யுடன் வருவோரை அனுமதிக் கக் கூடாது, இரட்டை அர்த்தப் பாடல்கள் இளைஞர்கள், மாண வர்களின் மனதைக் கெடுக்கும். எனவே அவ்வகையான பாடல் களை ஒலிபரப்பக் கூடாது.

குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம், ஜாதி சார்ந்த பாடல்கள், நடனம் இடம்பெறக் கூடாது. கட்சி, மதத் தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

எழுத்துப்பூர்வ அனுமதி தேவை

மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் நிகழ்ச்சி இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டாலோ, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டாலோ போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்போது, இந்த அனைத்து நிபந்தனைகளை யும் குறிப்பிட்டு போலீஸார் எழுத் துப்பூர்வ அனுமதி வழங்க வேண் டும் என நீதிபதி உத்தரவிட் டார்.

SCROLL FOR NEXT