தமிழகம்

‘ஆட்சியை கவிழ்க்க முயற்சி’- ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது திட்டமிட்ட சதி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக, பாஜக, ஓபிஎஸ்.அணி, வருமான வரித்துறை ஆகியன இணைந்து செய்த சதியே காரணம் என்று அஇஅதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், அஇஅதிமுக அம்மா கட்சி வேட்பாளருமான டிடிவி தினகரன் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்வதற்காக சொல்லப்பட்டுள்ள சப்பைக்கட்டு காரணங்கள் எல்லாவற்றையும் பார்த்தால் இதில் மத்திய அரசின் வேலை இருக்கிறது என்றுதான் தெரிகிறது. ஏனென்றால், நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதாலும். பாஜக டெபாசிட்கூட வாங்க முடியாத நிலை இருந்த தாலும், அக்கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லி வந்ததை பார்க்கும்போதும் தேர்தல் ரத்து திட்டமிட்ட நாடகமாகத்தான் தெரிகிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மூலம் தேர்தலுக்கு முன்பே நான் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றித் தருவேன்.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீது தவறு இருந்தால் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கட்டும். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கும், அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத் தியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. அமைச்சரின் சொந்த ஊரில் அவருக்கு நெருக்கமானவரிடம் இருந்து ரூ.5 கோடியை வருமான வரித் துறை எடுத்துள்ளனர். அதற்கும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று தெரியவில்லை.

நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியினர் கூறிய பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்த அன்றே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினேன். நான் அப்போதே சொன்னேன். முதல்வர் ஜெய லலிதாவின் மரணத்தை அரசிய லாக்க நினைத்தவர்கள், நினைத்த படி எதுவும் நடக்கவில்லை. சமூகவலைத் தளங்கள், சில மீடியாக்கள், பத்திரிகைகளை வைத்து அவர்கள் பரப்பிய அவ தூறுகளை மக்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு மாபெரும் ஆதரவு இருப்பதைத் தெரிந்துகொண்டு தேர்தலை நிறுத்துவதற்கான அடிப்படை வேலைகளை அப்போதே செய்தனர்.

ஓட்டுக்காக நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. தேர்தல் வேலைக்காக பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிலே செலவுக்கு வைத்திருந்த பணத்தைத்தான் எடுத்துக் கொண்டு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இத்தேர்தலை நிறுத்தியிருப்பதால் எங்களுக்கு அரசியல் பின்னடைவு இல்லை. இது ஒரு அனுபவம்தான்.

இரட்டை இலை சின்னம் தொடர் பாக வரும் 17-ம் தேதி சில ஆவணங்களை தேர்தல் ஆணை யம் கோரியுள்ளது. அவற்றை சமர்ப்பித்து எங்கள் வழக்கறிஞரை வைத்து வாதிடுவோம். நிச்சயம் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதற்கு முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவேன். இப்போதைக்கு எனது வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

எப்படியும் எங்களை ஒழித்துவிட வேண்டும் என்று எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள். திமுக, ஓபிஎஸ் அணி, பாஜக, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் எல்லாம் கூட்டணி வைத்து செயல்படுகின்றன. இவர்களது திட்டமிட்ட சதியால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சிக் கும் ஆட்சிக்கும் நெருக்கடி கொடுத்தால் கட்சியை ஒழித்துவிட லாம், ஆட்சியைக் கவிழ்த்துவிட லாம் என்று நினைத்து ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு 6 மாதங்களாகவே முயற்சிகள் நடக் கின்றன. இதை எல்லாம் நாங்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயி களை பிரதமர் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதுதான் எங்களது நிலைப்பாடு.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

SCROLL FOR NEXT