தேர்தல் பணியாளர்களுக்கு சென்னையில் இறுதி கட்டப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் முதல்கட்ட பயிற்சி மார்ச் 30-ம் தேதியும், இரண்டாவது பயற்சி ஏப்ரல் 13-ம் தேதியும் நடைபெற்றது. தற்போது அண்ணா நகர், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை தவிர சென்னையில் உள்ள மற்ற 13 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் ஏற்கெனவே பயிற்சிகள் முடிந்துவிட்டன.
தென்சென்னையில் புதிய வகை வாக்குப்பதிவு இயந்திரங் கள் இந்த தேர்தலில் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இந்த தொகு தியில்தான் தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். எனவே தேர்தல் பணியாளர்களுக்கு புதிய இயந் திரத்தை இயக்குவது எப்படி, ஒரே நேரத்தில் 3 இயந்திரங்களை இணைத்து கோளாறு இல்லாமல் இயக்குவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய சென்னை தொகுதியில் இந்த முறை விவிபேட் (யாருக்கு வாக்களித்திருக்கிறோம் என் பதை தெரிந்துகொள்ள வாக்குப் பதிவுக்கு பிறகு பெறப்படும் சீட்டு) என்ற வசதி அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த வசதி குறித்து தேர்தல் பணியாளர்களின் சந் தேகங்கள் தீர்க்கப்படுவதற்கா கவும், வாக்காளர்களுக்கு இதை கற்றுத் தருவதற்காகவும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
வட சென்னையில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில் வழக்கமான தேர்தல் பணிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த தொகுதி யிலும் 3 இயந்திரங்கள் தேவைப் படும் என்பதால் அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.