தமிழகம்

ரவுண்டு டேபிள் ஆஃப் இண்டியா நடத்தும் ‘தமிழ்நாட்டின் பெருமை விருது’ வெற்றியாளரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு: ஆன்-லைனில் அனைவரும் வாக்களிக்கலாம்; இன்றே கடைசி

செய்திப்பிரிவு

பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் தமிழகம் எப்போதும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த வெற்றிப் பாதையின் பின்புலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர் களுக்கு அவ்வப்போது அங்கீகாரம் அளிக்க வேண்டியதும் ஊக்கமளிக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ள திறன்மிக்கவர்களை அடை யாளம் கண்டு, அங்கீகரித்து கொண் டாடும் வகையிலான எண்ணங்களுடன் தான் ‘ப்ரைடு ஆஃப் தமிழ்நாடு’ என்னும் இந்த இயக்கமானது ‘ரவுண்டு டேபிள் ஆஃப் இண்டியா’வால் உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் இதனை திறம்பட செயலாக்குவ திலும் பிரமுகர்களைத் தேர்ந்தெடுப் பதிலும்தான் அடங்கியுள்ளது. இதன் கடினமான செயலாக்க வழிமுறை களை, அரசு அதிகாரிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழில்முனை வோர்கள் மற்றும் பிரபலங்கள் அடங் கிய தீர்ப்புக் குழு மதிப்பீடு செய்தது.

அதன் பின் வளர்ந்துவரும் பிரமுகர்கள் என்னும் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட தனி நபர்களின் பட்டியல் தயாரானது. கலை மற்றும் கலாச்சாரம், தொழில்முனைவோர்கள், உணவு மற்றும் பானங்கள் என பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தோரை இந்த பட்டியல் உள்ளடக்கியுள்ளது. வளர்ந்துவரும் பிரமுகர்கள் என்னும் பிரிவில் பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். www.prideoftamilnadu.com என்னும் இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் வாக் களிக்கலாம். வாக்குப் பதிவு இன்று (மார்ச் 14) நிறைவு பெற்றுவிடும்.

19 மார்ச் அன்று மாலை 6 மணிக்கு சென்னையிலுள்ள ஹோட்டல் ஃபெதர் ஸில் நடைபெற உள்ள விருதுக்கான விழாவில் தமிழ்நாட்டின் ஊக்கம் தரும் பிரமுகர்கள் / நிறுவனங்கள் என்னும் விருது பெறவுள்ள நபர்களை தீர்ப்புக் குழுவானது முடிவு செய்துவிட்டது.

விவசாயிகளுடன்..

தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் அவல நிலையை உணர்ந்து அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தேவைக்கு அப்பால், அந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசும் ஓய்வூதியமும் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வின்போது நடிகர் விஷால் தனது பங்கை அளிப்பார் என்பது மிகுந்த நெகிழ்ச்சிக்குரியதாகும்.

லாப நோக்கமில்லாத நிறுவனமான ரவுண்டு டேபிள் இண்டியா, நிதி திரட்டுவதற்காக இந்த ப்ரைடு ஆஃப் இண்டியா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் திரட்டப்பட்ட அனைத்து நிதியும் வறுமையில் வாடும் குழந்தைகளின் பள்ளிக்கூட அறைகளின் கட்டுமானத்துக்காக வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT