சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று எழும்பூர் ரயில் நிலையம். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் என பெரும்பாலான தென் தமிழக மக்கள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாகவே சென்னை வந்துசேர்கின்றனர்.
வார்தா புயலின் காரணமாக சென்னையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்ட நிலையில், அவை விரைவாக சரிசெய்யப்பட்டன. ஆனால் புயல் காரணமாகக் கீழே விழுந்த எழும்பூர் ரயில் நிலைய தமிழ் பெயர்ப்பலகை மட்டும் கண்டுகொள்ளப்படாமல் அப்படியே உள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் ரயில் நிலையத்தில் எழுத்துகள் விழுந்த நிலையில் உள்ள தமிழ் பெயர்ப் பலகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?