தமிழகம்

வேலை வாங்கி தருவதாகவிஷமிகள் கூறுவதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: மின்வாரியம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னைதமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வுகள் மூலமாக மட்டுமேபணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக விஷமிகள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடுமின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தர வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களை ஒரு சில தனியார் நிறுவனங்கள், தனியார் ஏஜென்சிகள் அணுகி வருவதாக தொடர்ந்து புகார்கள்வருகின்றன. மின்சார வாரியத் துக்கு பணியாளர்களைத் தேர்வுசெய்துகொடுக்க எந்த தனியார்அமைப்புகளுக்கோ, ஏஜென்சி களுக்கோ எவ்விதமான அனுமதி யும் வழங்கப்படவில்லை. எனவே,இதுபோன்ற போலி வார்த்தை களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

வாரியத்தால் அறிவிக்கப்படும் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் மதிப்பெண்களைக் கொண்டு தகுதி அடிப்படையில் மட்டுமே பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன. தவிர, மின்சார வாரியத்தில் தற்போது ஒப்பந்த

தொழிலாளர்கள், தற்காலிக பணி யாளர்கள் தேர்வு செய்யப்படவும் இல்லை. எனவே, விஷமிகளின் போலி வார்த்தைகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். இத்தகையநபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT