தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை மற்றும் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.