ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத் தில் வன்முறையில் ஈடுபட்டவர் களை வாட்ஸ்-அப், பேஸ்புக், வீடியோ காட்சிகள் மூலம் சைபர் கிரைம் போலீஸார் அடையாளம் கண்டு வருகின்றனர். அதேபோல் வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்ததாக வெளியான தகவல் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகி றது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலி யுறுத்தி கடந்த 17-ம் தேதி சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த திங்கள் அன்று போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
சமூக விரோதிகள் ஜல்லிக்கட்டுக் கான ஆதரவு போராட்டத்தில் ஊடுருவி அமைதியை சீர்குலைத்த னர். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.
இதற்கிடையில், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலை யில் போலீஸார் மீது தாக்குதல் நடந்தன. போலீஸாரும் சில இடங் களில் தடியடி நடத்தினர். நடுக்குப் பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.
இதில் காவல்துறையை சேர்ந்த 142 பேர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் 138 பேருக்கு காயம் ஏற்பட்டது. காவல் துறையினரின் வாகனம் உள்பட 117 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 66 வழக்குகள் பதியப்பட்டு 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ளோரின் பட்டியல் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. வன்முறையாளர்களை அடையாளம் காண்பதில் போலீஸா ருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த திங்கள் அன்று வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் வெளி யான புகைப்படம், வீடியோக் களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலும் ஏராளமான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் வெளியாகின. அதையும் சேகரித்து சைபர் கிரைம் போலீஸார் குற்றவாளிகளின் பட்டியலைத் தயார் செய்து வருகின்றனர்.
அந்த பட்டியலை சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களுக்கு வழங்கி வருகின்றனர். அவர்கள் சென்னை எல்லைக்கு உட்பட்ட 135 காவல் நிலைய நுண்ணறிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போராட்ட மோதலின்போது அசம்பா வித சம்பவங்களில் ஈடுபட்டவர் களின் பின்னணி பற்றியும் விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற காட்சிகளும் வெளியாகின. இதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக கூடுதல் காவல் ஆணையர் சேஷசாயி தெரிவித்துள்ளார்.