தென்காசியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சப் - இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் மெக்கா நகரைச் சேர்ந்தவர் முகமதுஷாபி(19), ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான செங்கோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயிலுடன்(25) தென் காசி ஐவராஜா கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் முகமதுஷாபியை வெட்டிக் கொலை செய்தனர். இதைத் தடுக்க முயன்ற இஸ்மாயிலுக்கும் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.
இதுகுறித்து தென்காசி போலீ ஸார் நடத்திய விசாரணையில், கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் சுக்கூர்(30), இவரது மாமனார் சண்முகம் ஆகியோருக்கு முகமது ஷாபி கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசார ணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
செல்போன் பறிப்பு
அப்துல்சுக்கூரும் முகமது ஷாபியும் உறவினர்கள். அப்துல் சுக்கூரின் சகோதரியிடம் முகமதுஷாபி செல் போனில் அடிக்கடி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட் களுக்கு முன் முகமதுஷாபியை அவர் கண்டித்துள்ளதுடன் அவரது செல்போனையும் பறித்தார். பின்னர், தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அப்துல்சுக்கூர் வந்துள்ளார்.
நேற்று முன்தினம் அங்கு வந்த முகமதுஷாபி, தனது செல்போனை தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, அப்துல்சுக்கூரும், அவ ரது மாமனார் சண்முகமும் சேர்ந்து அவரை கொலை செய்ததாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட சண்முகம் ஆலங்குளத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரி கிறார். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்