சேலம் மாவட்டத்தில் வெள்ளிப் பட்டறைத் தொழிலாளர்கள், கூலியாக கிலோவுக்கு 70 கிராம் சேதாரம் பெற்றுவந்த நிலையில், 110 கிராமாக சேதாரத்தை அதிகரித்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் வெள்ளிப் பட்டறைகள் மூடப்பட்டன.
இந்திய அளவில் வெள்ளிக் கொலுசு உற்பத்தியில், சேலம் மாவட்டம் முதல் இடத்தை வகிக்கிறது. இங்கு தயாராகும் வெள்ளிக் கொலு சுகள் வடமாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் இயந்திர உதவியின்றி வெள்ளிக் கொலுசுகள் தயாராவதால் தரமானதாக இருக்கும். இங்கு உற்பத்தியாகும் வெள்ளிக் கொலுசுக்கு உலகம் முழுவதும் வரவேற்புள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, திருவாக் கவுண்டனூர், கொல்லப் பட்டி, மணிய னூர், அம்மாபாளையம் உள்பட பல பகுதிகளில் குடிசைத் தொழில்போல் வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி செய்கின்றனர்.
தற்போது, வெள்ளியின் விலை நாளுக்கு நாள் சரிந்துவரும் சூழலில், சேலத்தில் வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளிப் பொருள் உற்பத்தி யாளர்கள், சேதாரத்தை அதிகப் படுத்தித் தர வேண்டும் என்று வெள்ளி உற்பத்தி செய்யும் உரிமை யாளர்களிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் உயர்த்தி தர மறுத்துள்ளனர். இதனால், சேலத்தில் பல்வேறு வெள்ளி சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.
சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் வெள்ளிப் பட்டறைத் தொழிலாளர்கள், கிலோ வுக்கு சேதாரமாக 70 கிராம் வெள்ளி அளித்து வந்ததை 110 கிராமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் சிறிய, பெரிய வெள்ளிப்பட்டறைகள் மூடப்பட்டன. இதில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சேலம் மாவட்டத்தில் சுமார் 5 டன் வெள்ளி உற்பத்தி தேக்கமடைந்து, பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.