தமிழகம்

சேலம் அன்னை சத்தியா நினைவு குழந்தைகள் காப்பகத்துக்கு புதிய கட்டிடம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சேலம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகத்துக்கு புதிய கட்டிடம் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் சமூக நலத் துறை சார்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:

''தமிழக அரசால் தற்போது 36 அரசு குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகக் கட்டிடம் கட்டப்பட்டு 38 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மிகவும் பழுதடைந்துள்ளதால், தற்போதுள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 100 குழந்தைகள் தங்கும் வகையில் வகுப்பறைகள், அலுவலக அறை, உணவருந்தும் கூடம், நவீன சமையலறை, பண்டக பொருட்கள் வைப்பறை, துயிற்கூடங்கள் (கழிவறை மற்றும் குளியலறை வசதியுடன்) தியான அறை, பொழுது போக்கு அறை, பணியாளர்கள் அறை மற்றும் 10 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT